திருநறையூர் நம்பி கோயில்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு பெருமாள் கோயில்திருநறையூர் நம்பி கோயில் அல்லது சீனிவாசப் பெருமாள் கோயில் அல்லது நாச்சியார்கோயில், தமிழ்நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் தெற்கே நாச்சியார்கோயில் எனும் ஊரில் அமைந்துள்ளது. இவ்வூரில் வைணவ திருநரையூர் நம்பி திருக்கோயில் எனும் சீனிவாசப் பெருமாள் கோயில் அமைந்துள்ளது. சோழ நாட்டு பதினான்காவது திருத்தலமாகும். இக்கோவில் விஜயநகர மன்னர்களால் கட்டப்பட்ட ஐந்து ஏக்கர் நிலப்பரப்பில் எழுபத்து ஐந்து அடி உயரமுள்ள ஐந்து நிலையான ராஜகோபுரத்தையும் ஐந்து பிரகாரங்களையும் கொண்டதாகும். இக்கோயிலிலில் நடைபெறும் கல் கருடச் சேவை உலகப் புகழ் பெற்றது. நாச்சியார் கோவிலில் உள்ள திருநரையூர் நம்பி திருக்கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் கல் கருடச் சேவை புகழ்பெற்றதாகும். இவ்வூரில் தயாரிக்கப்படும் நாச்சியார் கோயில் விளக்கிற்கு புவிசார் குறியீடு கிடைக்கப்பெற்றுள்ளது




